Shanmugan Murugavel / 2026 ஜனவரி 21 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் பொதுமக்களின் தகவல்களை அறியும் உரிமைக்காக வருடத்தில் 365 நாட்களும் செய்தி அறிக்கையிடலில் அயராது உழைக்கும் ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி திட்டமாக நான்காவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுஹாதா மென்பந்து கிரிக்கெட் தொடர் மற்றும் சுஹாதா சந்திப்பு, ஜனவரி 25, 2026 அன்று ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள அங்கம்பிட்டிய மைதானத்தில் நடைபெற எல்லா ஏற்பாடுகளும் தயாராகி வருகிறது.
தொடக்க விழா கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில், வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் அரசியல் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்புடன் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தொடரில் கொழும்பு லயன்ஸ், கொழும்பு ஈகிள்ஸ், கொழும்பு றைடர்ஸ், கொழும்பு றோயல்ஸ், கொழும்பு ஸ்டாலியன்ஸ், கொழும்பு றேஞ்சர்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
21 minute ago
28 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
28 minute ago
34 minute ago
1 hours ago