Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 07 , பி.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஏ.எல்.எம். ஷினாஸ்
மருதமுனை ஈஸ்டர்ன் யூத் விளையாட்டுக் கழகம், அதன் 48ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட லீக்கின் அனுசரணையோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகள் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்று வருகின்ற நிலையில், அண்மையில் நடைபெற்ற ஈஸ்டர்ன் யூத் விளையாட்டுக் கழகம், மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகதுக்கிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
ஈஸ்டர்ன் யூத் விளையாட்டுக் கழகம் சார்பாகப் பெறப்பட்ட கோலை எம். ரோஷான் பெற்றதோடு, ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஏ.ஆர்.எம். றாஷிம் பெற்றிருந்தார்.
இந்த போட்டிகளில் அம்பாறை மாவட்டத்தின் கால்பந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களான ஈஸ்டர்ன் யூத், ஒலிம்பிக், கோல்ட் மைன்ட், சனிமெளண்ட், யுனைட்டட், பிர்லியன்ட், கிறீன் மெக்ஸ் , எவரெடி, ஆகிய விளையாட்டு கழகங்கள் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடவுள்ளன. போட்டிகளில் வெற்றி பெறும் கழகங்களுக்கு அந்தந்த போட்டி நடைபெறும் தினத்திலேயே பரிசளிப்பு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன. மின்சாரம் அமுலில் உள்ள காலப்பகுதியில் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இந்த போட்டிகள் மசூர்மெளலானா விளையாட்டு மைதானத்தில் இரவு 9.00 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago