Editorial / 2019 ஜூன் 23 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டத் தொடரில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி சம்பியனாகியது.
புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் பருத்தித்துறை சென். தோமஸ் கல்லூரியை வென்றே அளவெட்டி அருணோதயக் கல்லூரி சம்பியனாகியிருந்தது.
இறுதிப் போட்டியின் முதலாவது செட்டை 25-17 என்ற புள்ளிகள் கணக்கில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி கைப்பற்றியபோதும், இரண்டாவது செட்டை 25-17 என்ற புள்ளிகள் கணக்கில் பருத்தித்துறை சென். தோமஸ் கல்லூரி கைப்பற்றியிருந்தது. அந்தவகையில், தீர்க்கமான மூன்றாவது செட்டை 26-24 என்ற புள்ளிகள் கணக்கில் நூலிழையில் கைப்பற்றிய அளவெட்டி அருணோதயக் கல்லூரி சம்பியனானது.
இத்தொடரில் மூன்றாமிடத்தை கோப்பாய் மகா வித்தியாலயம் பெற்றது.
13 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
1 hours ago