குணசேகரன் சுரேன் / 2019 மே 30 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண மாவட்ட ரீதியில், கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய மென்பந்தாட்டத் தொடரில் பொற்பதி விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.
அணிக்கு ஆறு பேர், ஐந்து ஓவர்கள் கொண்ட குறித்த தொடரின் இறுதிப் போட்டி ஞானம்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றபோது கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக் கழகத்தை வென்றே பொற்பதி விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொலின்ஸ் விளையாட்டுக் கழகம், ஐந்து ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பிரகாஸ் 26, தாஸ் 25, துவாரகன் 15 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு, 83 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய பொற்பதி விளையாட்டுக் கழகம், 4.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், சத்தியன் 36, பிரபு 29 ஓட்டங்களைப் பெற்றனர்.
இறுதிப் போட்டியின் நாயகன், தொடரின் நாயகனாக சத்தியன் தெரிவாகியிருந்தார்.
10 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026