Editorial / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்

வட மாகாண மாவட்ட செயலகங்களுக்கிடையிலான ஆண்களுக்கான ஹொக்கி தொடரில் மன்னார் மாவட்ட செயலகம் பலத்த போராட்டத்தில் சம்பியனாகியது.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தை வென்றே மன்னார் மாவட்ட செயலகம் சம்பியனாகியிருந்தது.
இறுதிப் போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில், முதல் பாதியில் இரண்டு அணிகளாலும் கோலெதனையும் பெற முடியவில்லை.
இந்நிலையில், இரண்டாவது பாதியிலும் கோலெதுவும் பெறப்படாமல் போட்டியின் வழமையான நேர முடிவில் இரண்டு அணிகளும் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் காணப்பட்டிருந்தநிலையில், பெனால்டியில் மன்னார் மாவட்ட செயலகம் 3-2 என்ற ரீதியில் வென்று சம்பியனாகியது.
9 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026