Editorial / 2019 ஜூன் 25 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பூப்பந்தாட்டத் தொடரில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை சம்பியனாகியது.
மன்னார் உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் சுண்டுக்குழி மகளிர் கல்லூரியை வென்றே பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை சம்பியனாகியிருந்தது.
மூன்று ஒற்றையர், இரண்டு இரட்டையர் போட்டிகளைக் கொண்ட குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையின் சேர்ந்த ராகவி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-08, 21-09 என்ற புள்ளிகள் கணக்கிலும், பிரசாந்தினி 21-19, 21-14 என்ற புள்ளிகள் கணக்கிலும் எழிலரசி 21-19, 21-19 என்ற புள்ளிகள் கணக்கிலும் வென்றமையைத் தொடர்ந்து அவ்வணி சம்பியனாகியது.
இத்தொடரில் மூன்றாமிடத்தை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி பெற்றது.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026