Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
குணசேகரன் சுரேன் / 2019 ஜூன் 08 , பி.ப. 02:30 - 1 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில், பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்படும் பெரு விளையாட்டுப் போட்டிகளில், 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சம்பியனாகியது.
ஏழு அணிகள் பங்கேற்ற விலகல் முறையிலான இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு யாழ். மத்திய கல்லூரியும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் தகுதி பெற்றிருந்தன.
முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் யாழ். இந்துக் கல்லூரியின் இரண்டு வீரர்கள் காயமடைந்தமையாலும், மேலதிக மாற்று வீரர்கள் இல்லாமை காரணமாகவும், இறுதிப் போட்டியில் அவ்வணி கலந்துகொள்ளவில்லை. இதனால், யாழ். மத்திய கல்லூரி வெற்றிபெற்றுச் சம்பியனாகியதாக அறிவிக்கப்பட்டது.
இத்தொடரின் மூன்றாமிடத்துக்கான போட்டியில், சென். பற்றிக்ஸ் கல்லூரியை 70-45 என்ற புள்ளிகள் கணக்கில் வென்ற கொக்குவில் இந்துக் கல்லூரி மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.
2 hours ago
5 hours ago
sivakanthan. Wednesday, 12 June 2019 01:02 PM
well done jaffna central. god bless.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago