குணசேகரன் சுரேன் / 2019 ஜூன் 05 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில், பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்படும் பெரு விளையாட்டுப் போட்டிகளில் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை சம்பியனானது.

எட்டு அணிகள் பங்கேற்ற விலகல் முறையிலான இத்தொடரின் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியை வென்றே வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை சம்பியனாகியிருந்தது.
இப்போட்டியில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, முதற்காற் பகுதியில் 9-2 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றதுடன், முதற்பாதி முடிவில் 15-2 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்து, மூன்றாவது காற்பகுதி முடிவில் 21-2 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் காணப்பட்டு, இறுதியில் 31-2 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது.

இத்தொடரின் மூன்றாமிடத்துக்கான போட்டியில், வேலணை மத்திய கல்லூரியை எதிர்கொண்ட உடுவில் மகளிர் கல்லூரி 26-11 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தது.
9 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026