2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சம்பியனான அக்னி

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 20 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

- துவாரக்ஷான்

அக்கரப்பத்தனை அயோனா விளையாட்டு கழகம் வரலாற்றில் முதல் தடவையாக இளைஞர்களை விளையாட்டுத்துறையில் ஊக்குவிக்கும் வகையில் அணிக்கு ஏழு பேர் கொண்ட மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரானது அயோனா தோட்ட பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடத்தப்பட்டது.

இப்போட்டியில் உள்ளூர் மட்டத்தில் உள்ள எட்டு அணிகள் மாத்திரம் கலந்துகொண்டன. இதில், இறுதிப் போட்டியில் லக்‌ஷ்மி கழகத்தை வென்று அக்னி அணி சம்பியனாகியது.

சம்பியனான அக்னி அணிக்கும், இரண்டாமிடம் பெற்ற லக்ஷ்மி கழகத்துக்கும் வைத்திய அதிகாரி வேலு முத்துமணி, சமூக சேவையாளர் எம். சந்திரகுமார், நலன்விரும்பியான ஆர். குணசீலன், தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் செல்வராஜ் மற்றும் கே. ஜெகநாதன், எஸ். ரவிச்சந்திரன் ஆகியோர் வெற்றிக் கிண்ணங்களையும் சான்றிதழ் உள்ளிட்ட பணப் பரிசுகளையும் வழங்கி வைத்தனர்.

இதற்கான ஒழுங்குகளை ஊடகவியலாளர் கே. புஷ்பராஜ், எஸ். சுரேஷ், கே. ஞானசேகர் ஆகியோர் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .