2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சம்பியனான அம்பாறை நிந்தவூர் மதினா வி.க

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 13 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.என்.எம். அப்ராஸ்

தேசிய கபடி சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட இவ்வாண்டுக்கான தேசிய மட்ட மாவட்ட ரீதியிலான கபடித் தொடரின் சம்பியனாக அம்பாறை நிந்தவூர் மதினா விளையாட்டுக் கழக தெரிவாகியது.

காலிறுதி போட்டியில் கேகாலை மாவட்டத்தை வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று, அரையிறுதியில் அநுராதபுர மாவட்டத்தை எதிர்த்து விளையாடி அப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு மதினா தகுதி பெற்றுக் கொண்டது.

இந்நிலையில், கொழும்பு டொரிங்டன்
தேசிய விளையாட்டு தொகுதி வெளி அரங்கில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் மட்டக்களப்பை 56-20 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றே அம்பாறை சம்பியனாகியது.

அம்பாறையின் அணித்தலைவராக செயற்பட்ட இலங்கை தேசிய கபடி அணி வீரரும், பங்களாதேஷின் மேக்னா கபடி கழக வீரரும் ஆகிய எம்.டீ. அஸ்லாம் சஜாவின் சிறந்த றைடிங்க் விளையாட்டுத் திறமை மூலமாக தொடரின் சிறந்த வீரருக்கான வெற்றிக் கிண்ணமும் பணப்பரிசும் அவருக்கு வழங்கி
வைக்கப்பட்டது.

இதேவேளை இவ்  அணிக்கு  வலு சேர்த்து மற்றுமொரு (Raider )ஆக செயற்பட்ட இலங்கை தேசிய கணிகஷ்ட கபடி அணி வீரர் எஸ். எம். சபிஹான் தமது அணி எதிர்கொண்ட மொனறாகலை மாவட்டத்துடனான  முதலாவது போட்டியில் சிறந்த போட்டி வீரருக்கான பணப் பரிசினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .