2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

சம்பியனான கடற்படை மகளிர் அணி

Editorial   / 2025 செப்டெம்பர் 02 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி 2025 ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 17 வரை வெற்றிகரமாக நடைபெற்றதுடன், சிறப்பாக விளையாடி தொடர் முழுவதும் தோல்வியடையாமல் இருந்த கடற்படை அணி, கட்டுநாயக்க விமானப்படை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் விமானப்படை அணியை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, சம்பியனானது.

இலங்கை கிரிக்கெட் ஏற்பாடு செய்த கழகங்களுக்கிடையிலான 50 ஓவர் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தீவின் புகழ்பெற்ற விளையாட்டுக் கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 10 அணிகள் பங்கேற்றன.

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம், இராணுவ விளையாட்டுக் கழகம், பதுரெலிய விளையாட்டுக் கழகம், சிங்கள விளையாட்டுக் கழகம், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்,  ஏஸ் கபிடல் கிரிக்கெட் கழகம், கொழும்பு கிரிக்கெட் கழகம் மற்றும் பாணந்துறை விளையாட்டுக் கழகம், தொடர் முழுவதும் சிறந்த விளையாட்டுத் திறனை வெளிப்படுத்திய கடற்படை அணி, தாங்கள் எதிர்கொண்ட அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் முன்னிலை வகித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கடற்படை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு 184 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய விமானப்படை அணி 45 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

அதன்படி, இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்படை வீராங்கனை ஹர்ஷிதா சமரவிக்ரம, 8 போட்டிகளில் 471 ஓட்டங்கள் எடுத்து, தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனைக்கான விருதை வென்றதடன், சுழற்பந்து வீச்சாளர் இனோகா ரணவீர 8 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் மற்றும் சிறந்த பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X