Shanmugan Murugavel / 2024 ஜூலை 18 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வி.ரி. சகாதேவராஜா

சம்மாந்துறை வலய விளையாட்டு போட்டியின் பெருவிளையாட்டு போட்டிகளில் கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் சம்பியனானது.
நான்கு போட்டிகளில் சம்பியனான கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம், ஒரு போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்றது.
பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கே .எல்.எம் ஸகி அனைத்து போட்டிகளுக்குமான பயிற்சியை இரவுபகல் பாராமல் வழங்கியிருந்தார்.

கரப்பந்தாட்டம் 16 வயதுக்குட்பட்ட மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கானத போட்டியில் சம்பியனானதுடன் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான போட்டியிலே இரண்டாமிடத்தையும் மற்றும் கால்பந்தாட்ட போட்டியில் 17 மற்றும் 20க்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் கோரக்கர் த.ம.வி சம்பியனானது.
இதனை விட மாகாணமட்ட போட்டிகளுக்கு மேசைப் பந்தாட்டம் 16 வயது ஆண், பெண். மற்றும் இருபது வயது ஆண் ரக்பி என்பன மாகாணமட்ட போட்டிகளில் கோரக்கர் த.ம.வி பங்குபற்றவுள்ளது.
5 hours ago
7 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
16 Nov 2025