2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சம்பியனான தம்பலகாமம் பிரதேச கழக அணி

Shanmugan Murugavel   / 2022 செப்டெம்பர் 20 , பி.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஹஸ்பர்

பிரதேச செயலக கழகங்களுக்கிடையிலான நடாத்தப்பட்டு வந்த மாவட்ட விளையாட்டு விழா நிகழ்வில் மெய்வல்லுநர் போட்டியில் தம்பலகாமம் பிரதேச கழக அணி சம்பியனாகியது.

கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற இப்போட்டியில் தம்பலகாமல் பிரதேசக கழக அணியானது 10 தங்கப் பதக்கங்களையும், ஆறு வெள்ளி பதக்கங்களையும், மூன்று வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 19 பதக்கங்களை தனதாக்கிக் கொண்டனர்.

இதில் மைதான நிகழ்ச்சி நிரல் வீரராகவும், அனைத்து சகல துறை வீரராகவும் ஏ. ஆபித் தெரிவாகினார். தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ. ஸ்ரீபதியின் வழிகாட்டுதலுக்கிணங்க விளையாட்டு உத்தியோகத்தர் கே.டி. ஹாரிஸ் குறித்த வீரர்களுக்காக  திறம்பட பயிற்சியளித்திருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .