Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 24 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.என்.எம். அப்ராஸ்

33ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் கபடி போட்டியில் தேசிய மட்ட சம்பியனாக நிந்தவூர் கபடி வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு சுகததாஸ விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்ற போட்டியில் வென்ற நிந்தவூர் மதீனா இளைஞர் கழக கபடி வீரர்களுக்கு தங்கப் பதக்கம், வெற்றி கிண்ணம், சான்றிதழ் மற்றும் பணப் பரிசுகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இப்போட்டியில் சிறந்த வீரராக மதீனாவின் கபடி வீரரும், தேசிய கனிஷ்ட கபடி அணி வீரருமாகிய எஸ்.எம். சபிஹான் தெரிவு செய்யப்பட்டதுடன் குழுநிலைப் போட்டிகளில் இவர் சிறந்த வீரருக்கான விருது பெறும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .