2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சம்பியனான பவர் பிளயர் அணி

Shanmugan Murugavel   / 2022 செப்டெம்பர் 28 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.என்.எம். அப்ராஸ், யூ.கே. காலித்தீன்

சிநேகபூர்வ இருபதுக்கு – 10 கிரிக்கெட் கிண்ணத் தொடரில் பவர் பிளயர் அணி சம்பியனானது.

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பவர் பிளாஸ்டர் 89/91 அணியை வீழ்த்தியே பவர் பிளயர் சம்பியனானது.

 இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பவர் பிளயர் அணியின் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பவர் பிளயர் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், நசீர்கான் ஆட்டமிழக்காது 34, நஸ்வி 20, தாரிக் 20 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஐயூப்கான், சக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, ஜிப்ரி, இஸ்ஸடீன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்கு, 113 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பவர் விளாஸ்டர் அணி ஏழு ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 35 ஓட்டங்களையே பெற்று 78 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், அப்துல் மஜீட் 15 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில், அஜ்மல், ஜௌஸி, கடாபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியதோடு, சிராஜ், தாரிக், நசீர்கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இத்தொடரின் நாயகனாக தாரிக் தெரிவானார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .