2025 மே 01, வியாழக்கிழமை

சம்பியனான மருதமுனை அல் -மதீனா

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 02 , பி.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஏ.எல்.எம். ஷினாஸ்

கிழக்கு மாகாணத்தில் 18 வயதுக்குட்பட்ட மாகாண மட்ட கால்பந்தாட்டத் தொடரில் மருதமுனை அல்- மதீனா வித்யாலயம் சம்பியனானது.

கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய பொது விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை (28) நடைபெற்ற இறுதிப் போட்டியில் கிண்ணியா வலயத்துக்குட்பட்ட அல் - அமீன் வித்தியாலயத்தை வென்றே கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட அல்- மதீனா வித்தியாலயம் சம்பியனானது.

இப்போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், 4-2 என்ற ரீதியில் பெனால்டியில் வென்றே மதீனா சம்பியனாகி தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியது.

இதனையடுத்து பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களை பிரதான வீதியில் இருந்து பாடசாலை வரைக்கும் கல்வி சமூகம், நலன் விரும்பிகளினால் மாணவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .