2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சம்பியனான வி.ஆர்.கே ஸ்டாலியன்ஸ்

Shanmugan Murugavel   / 2023 ஏப்ரல் 17 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.ரி. சகாதேவராஜா

தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டை கிரிக்கெட்டுடன் வரவேற்பதற்காகவும், கல்முனைப் பிராந்திய இளைஞர்களுக்கிடையிலான நட்புப்பாலத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடனும், கல்முனையில் நடாத்தப்பட்டு வந்த புத்தாண்டுக் கிண்ண மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் வி.ஆர்.கே ஸ்டாலியன்ஸ் சம்பியனானது.

கல்முனை உவெஸ்லி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற ஷெஷான் லெவிண் லியோபார்ட்ஸை வென்றே ஸ்டாலியன்ஸ் சம்பியனாகியிருந்தது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஸ்டாலியன்ஸ், முதலில் களத்தடுப்பிலீடுபடத் தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய லியோபார்ட்ஸ், ஒன்பது ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 46 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 47 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஸ்டாலியன்ஸ், 6.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.

சம்பியனான ஸ்டாலியன்ஸுக்கு 50,000 ரூபாய் பணப்பரிசும், வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற லியோபார்ட்ஸுக்கு 30,000  ரூபாய் பணப் பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டது.

கல்முனையின் பாரம்பரியம் மிக்க பழைய தனியார் கழகங்களுடன் சில புதிய கழகங்களும் சேர்ந்து தினேஷ் லெவிண் டொமினேட்டர்ஸ், கிமா பைட்டர்ஸ், கிர்த்திக் ஹைஸ்னு ப்ரோஸ், றிச் லெவிண் டைகர்ஸ், வெற்றி விநாயகர் என மொத்தமாக ஏழு அணிகள் பங்குபற்றின. 

இதில் முதலாவது தகுதிகாண் போட்டியில் றிச் 11 டைகர்ஸை வென்று ஸ்டாலியன்ஸ் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த நிலையில், வெளியேற்றப் போட்டியில் பைட்டர்ஸையும், இரண்டாவது தகுதிகாண் போட்டியில் டைகர்ஸையும் வென்று இறுதிப் போட்டிக்கு லியோபார்ட்ஸ் தகுதி பெற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .