குணசேகரன் சுரேன் / 2019 ஜூலை 15 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிறாஸ்கொப்பர்ஸ் விளையாட்டுக் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கிறாஸ்கொப்பர்ஸ் பிறீமியர் லீக்கின் நான்காவது பருவகாலத்தில் அக்றஸிவ் போய்ஸ் அணி சம்பியனானது.
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜஃப்னா பந்தேர்ஸ் அணியை வென்றே அக்றஸிவ் போய்ஸ் அணி சம்பியனானது.
இறுதிப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அக்றஸிவ் போய்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஜஃப்னா பந்தேர்ஸ் அணி, 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 62 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், சஞ்சயன் தனித்து அதிரடி ஆவர்த்தனம் காண்பித்து 46 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில், டர்வின், இராகுலன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைபற்றினர்.
பதிலுக்கு, 63 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய அக்றஸிவ் போய்ஸ் அணி, 4.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், சுயந்தன் 37, ஆதித்தன் 19 ஓட்டங்களைப் பெற்றனர்.
26 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
33 minute ago