Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம், தனது 51ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய கால்பந்தாட்டத் தொடரில் காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
வடக்கு, கிழக்கில் 30 அணிகளை உள்ளடக்கியதாக கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய விலகல் முறையிலான இத்தொடரின் இறுதி நாளானது கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜா விளையாட்டுக்கழக தலைவர் த.தயாபரன் தலைமையில் இடம்பெற்றது.
பிற்பகல் இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் சொறிக்கல்முனை சாந்தன் குருஸ் அணியை பெனால்டியில் வென்று ஜெகன் விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதுடன், இரண்டாவது அரையிறுதிப் பண்டாரியாவெளி நாகர் அணியை பெனால்டியில் வென்று போட்டியில் முல்லைத்தீவு உதய சூரியன் அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தன.
இந்நிலையில், இறுதிப் போட்டியில், பெனால்டியில் உதயசூரியன் அணியை வென்று ஜெகன் அணி சம்பியனாகியிருந்தது.
இதேவேளை, மூன்றாமிடத்துக்கான போட்டியில் சாந்தன் குருஸ் அணியை வென்று நாகர் அணி மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.
இத்தொடரின் சிறந்த வீரனாக உதயசூரியன் அணி வீரர் எஸ். ஆர்த்தியும், சிறந்த பின்கள வீரனாக உதயசூரியன் அணி வீரர் எஸ். அபியும் தெரிவு செய்யப்பட்ட அதே வேளை சிறந்த கோல் காப்பாளராக ஜெகன் அணியின் பந்து காப்பாளரும் தெரிவு செய்யட்டனர்.
இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக, கிராமிய, பாடசாலை விளையாளையாட்டு, உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரவீந்திர சமரவிக்ரம, பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா. சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கான பரிசுகளை வழங்கிவைத்தனர்.
26 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
4 hours ago
6 hours ago