2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சம்பியனானது சென். ஜோன்ஸ் கல்லூரி

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே கண்ணன்

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஹொக்கி தொடரில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி சம்பியனாகியது.

தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியை வென்றே சென். ஜோன்ஸ் கல்லூரி சம்பியனாகியிருந்தது.

இப்போட்டியின் முதற்பாதியில் இரண்டு கோல்களைப் பெற்ற வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி 2-0 என்ற கோல் கணக்கில் முதற்பாதியில் முன்னிலை வகித்தபோதும் இரண்டாவது பாதியில் சென். ஜோன்ஸ் கல்லூரி இரண்டு கோல்களைப் பெற இறுதியில் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையானது.

இந்நிலையில், பெனால்டியிலேயே 2-1 என்ற ரீதியில் வென்று சென். ஜோன்ஸ் கல்லூரி சம்பியனாகியிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .