Shanmugan Murugavel / 2024 ஜூன் 26 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். அஷ்ரப்கான்

கலாநிதி யூ.கே. நாபீர் வெற்றிக் கிண்ண இருபதுக்கு -10 கடினபந்து கிரிக்கெட் தொடரில் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சம்பியனானது.
அம்பாறை மாவட்ட 32 முன்னணி விளையாட்டுக் கழகங்கள் மோதிய கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த இத்தொடரின் இறுதிப் போட்டியானது சாய்ந்தமருது தலைவர் அஸ்ரப் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்றபோது கல்முனை ஜீனியஸ் விளையாட்டுக் கழகத்தை வென்றே பிளாஸ்டர் சம்பியனானது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜீனியஸ் விளையாட்டுக் கழகம் 10 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 72 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு 73 ஓட்டங்களென்ற வெற்றியிலைக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பிளாஸ்டர் 8.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளையே இழந்து வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக ஏ.என்.எம். ஆபாக், தொடரின் நாயகனாக அஸாருதீன் தெரிவாகினர்.
2 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
8 hours ago