2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சம்பியனானது புதியசூரியன் விளையாட்டுக் கழகம்

சண்முகம் தவசீலன்   / 2019 ஜூலை 29 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு கற்சிலைமடு பரந்தாமன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் அமரர் –பழனிநாதன் பிரபாகரனின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட இவ்வாண்டுக்கான பிரபா வெற்றிக் கிண்ணத் தொடரில் முல்லைத்தீவு கரிப்பட்டமறிப்பு புதியசூரியன் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

பண்டாரவன்னியன் மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முல்லைத்தீவு சந்திரன் விளையாட்டுக் கழகத்தை வென்றே புதியசூரியன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியிருந்தது.

இறுதிப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற புதியசூரியன் விளையாட்டுக் கழகம் முதலில் களத்தடுப்பிலீடுபடத் தீர்மானித்தது.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய சந்திரன் விளையாட்டுக் கழகம், 11.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், கஜன் 23 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், ருஷாந், கிருபா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு, 75 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய புதிய சூரியன் விளையாட்டுக் கழகம், 6.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், றொசாந்த் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், கஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இத்தொடரின் நாயகனாக, இறுதிப் போட்டியின் நாயகனாக ருஷாந், தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரராக உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் தங்கராசா, தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக புதிய சூரியன் விளையாட்டுக் கழகத்தின் அஜெய் ஆகியோர் தெரிவாகினர்.

இதன்போது சம்பியனான புதியசூரியன் விளையாட்டுக் கழகத்தின் வீரர்களுக்கு விருந்தினர்களால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு வெற்றிக் கிண்ணமும் 15,000 ரூபாய் பணப்பரிசும், இரண்டாமிடம் பெற்ற சந்திரன் விளையாட்டுக் கழகத்துக்கு வெற்றிக் கிண்ணமும் 10,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது

பரந்தாமன் விளையாட்டுக்கழக தலைவர் அமிர்தலிங்கம் அனுசன் தலைமையில் இடம்பெற்ற இந்த இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராக  புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இலட்சுமிகாந்தன் சந்திரரூபன் (தம்பியன்), ஏனைய விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செல்லையா  பிரேமகாந், கரைதுறைப்பற்று  பிரதேச சபை   உறுப்பினர் இரத்தினம் ஜெகதீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் பிரத்தியேக செயலாளர் ரூபன், பண்டாரவன்னியன் மகா வித்தியாலய அதிபர் உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகளெனப் பலர் கலந்துகொண்டனர்.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .