2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

சம்பியனானது புத்தளம் செல்சி

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளத்தில் நடைபெற்ற அணிக்கு "கந்தையா வெற்றி கிண்ணத்துக்கான" கால்பந்தாட்டத் தொடரில் புத்தளம் செல்சி அணி சம்பியனாகியுள்ளது.

தலா ஒன்பது வீரர்களை கொண்ட 16 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், குளியாப்பிட்டி பம்பன்ன ஷார்ஜா கால்பந்தாட்டக் கழகத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே செல்சி சம்பியனானது.

செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை, எம். சபாக் பெற்றார்.

சிறந்த கோல் காப்பாளராக பம்பன்ன ஷார்ஜா அணியின் வீரர் எம். நப்சானும், சிறந்த வீரராக புத்தளம் செல்சி அணி வீரர் எம்.எஸ்.எம். பர்மானும் தெரிவாகினர்.

சம்பியனான செல்சி வெற்றிக் கிண்ணத்துடன் 30,000 ரூபாய் வழங்கப்பட்டதுடன், இரண்டாமிடம் பெற்ற ஷார்ஜா கால்பந்தாட்டக் கழகதுக்கு கிண்ணத்துடன் 20,000 ரூபாய் வழங்கப்பட்டது.

இறுதிப் போட்டிக்கு, புத்தளம் நகர சபைத் தலைவரும், புத்தளம் கால்பந்தாட்ட லீக் தலைவருமான எம்.எஸ்.எம். ரபீக் அதிதியாகக் கலந்து கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .