2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சம்பியனானது புத்தளம் விம்பிள்டன் கழகம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் கால்பந்தாட்ட லீக்கால் புத்தளம் நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடராக நடாத்தப்பட்டு வந்த ட்ரகன்ஸ் வெற்றிக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் புத்தளம் விம்பிள்டன் கழகம் சம்பியனானது.

புத்தளம் நகர சபை விளையாட்டு அரங்கில் மிக கோலாகலமாக நேற்று  இடம்பெற்ற இறுதிப் போட்டியில் யாழ் முஸ்லிம் யுனைட்டெட் அணியை வென்றே விம்பிள்டன் சம்பியனாகியிருந்தது.

இறுதிப் போட்டியின் வழமையான நேர முடிவில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்று 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்த நிலையில், வெற்றியை தீர்மானிப்பதற்காக இடம்பெற்ற பெனால்டியில் விம்பிள்டன் 4-1 என்ற ரீதியில் வென்று சம்பியனானது. 

இறுதிப் போட்டிக்கு மத்தியஸ்தர்களாக எம்.ஆர்.எம். அம்ஜத், எம்.எம். சிபான், எச். ஹாம்ருசைன், எம்.எஸ். அஸ்பான் ஆகியோர் கடமையாற்றியதோடு போட்டி ஆணையாளராக கே.எம். ஹிஷாம் கடமையாற்றினார். 

நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார்.

இத்தொடருக்கு புத்தளம் ட்ரகன்ஸ் கிரிக்கட் கழகத்தின் உரிமையாளர் முஹம்மது ரிஸ்பாக் பூரண அனுசரணை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

புள்ளிகள் அடிப்படையிலான முதல் சுற்றில் புத்தளம் கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் 10 அணிகள் பங்கேற்றிருந்தன. மொத்தம் 45 போட்டிகளை கொண்ட இத்தொடரில் ஒவ்வொரு அணியும் ஏனைய ஒன்பது அணிகளுடனும் ஒன்பது போட்டிகளில் கலந்துகொண்டிருந்தன.

இத்தொடரில் மூன்றாமிடத்தை லிவர்பூல் அணியும், நான்காமிடத்தை நியூ ஸ்டார்ஸ் அணியும் பெற்றிருந்தன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .