2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சம்பியனானது மட்டக்களப்பு மாவட்ட செயலகம்

Shanmugan Murugavel   / 2021 டிசெம்பர் 09 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க. விஜயரெத்தினம், வ. சக்தி

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வெற்றி கிண்ணத் தொடரில், மட்டக்களப்பு மாவட்ட செயலகம் சம்பியனானது.  

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நான்காவது தடவையாக நடாத்தப்பட்ட அரச திணைக்களங்களுக்கிடையிலான இந்த கிரிக்கெட் தொடரில் வாழைச்சேனை பஸ் டிப்போ அணியை வென்றே மட்டக்களப்பு மாவட்ட செயலகம் சம்பியனானது.

கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான 16 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் முதல்
சுற்று போட்டிகள் கடந்தாண்டு நிறைவு பெற்றிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொடரானது இடை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அரையிறுதிப் போட்டிகள் அண்மையில் ஆரம்பமாகி இறுதிப் போட்டி இடம்பெற்றிருந்தது.

இத்தொடரின் சிறந்த வீரராக மாவட்ட செயலக அணியைச் சேர்ந்த எம்.எம்.எம். பாஹு மும், சிறந்த பந்து வீச்சாளராக மாவட்ட செயலக அணியைச் சேர்ந்த வை. ஜெயராஜ் மற்றும் இறுதிப் போட்டியின் நாயகனாக மாவட்ட செயலக அணியைச் சேர்ந்த துரைசிங்கம் ராஜ்குமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

சம்பியனான மாவட்ட செயலக அணிக்கும், தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்குமான வெற்றிக்கிண்ணங்களையும், பரிசில்களையும் கோறளைப்பற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. நிருபா பிரிந்தன் வழங்கி வைத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .