Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
தீஷான் அஹமட் / 2019 ஜூலை 14 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் கால்பந்தாட்ட லீக்கால் நடாத்தப்பட்ட மூதூர் லீக் வன்டேஜ் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் மூதூர் ஹீரோ விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 11 அணிகள் பங்கேற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் ஈராக் விளையாட்டுக் கழகத்தை வென்றே ஹீரோ விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
இறுதிப் போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், பெனால்டியில் 5-4 என்ற ரீதியில் வென்றே ஹீரோ விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
இறுதிப் போட்டியின் நாயகனாக ஹீரோ விளையாட்டுக் கழகத்தின் கோல் காப்பாளர் எம். வஸீம் தெரிவாகியிருந்தார்.
இவ்விறுதிப் போட்டியில் அதிதிகளாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அநுரடி சில்வா, மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம். அரூஸ், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜே.எம். லாஹீர், மூதூர் கால்பந்தாட்ட லீக் தலைவர் எம். றிஸான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
6 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
24 minute ago