குணசேகரன் சுரேன் / 2019 ஜூன் 04 , மு.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில், பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்படும் பெரு விளையாட்டுப் போட்டிகளில், 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சம்பியனானது.
விலகல் முறையில் நடைபெற்ற 15 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், அண்மையில் தமது கூடைப்பந்தாட்டத் திடலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை வென்றே யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சம்பியனானது.

இப்போட்டியின் முதற்கால்பகுதி முடிவில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 7-6 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்ததுடன், இரண்டாவது கால்பகுதியிலும் தமது முன்னிலையைத் தொடர்ந்து முதற்பாதி முடிவில் 14-11 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் காணப்பட்டது.
எவ்வாறெனினும், மூன்றாவது காற்பகுதியிலிருந்து தமது வேகத்தை அதிகரித்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 24-23 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றதுடன், இதை இறுதி வரையில் மிகவும் கடினமாகப் போராடி தக்க வைத்து இறுதியில் 35-33 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது.

இத்தொடரின் மூன்றாமிடத்துக்கான போட்டியில், கொக்குவில் இந்துக் கல்லூரியை எதிர்கொண்ட யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி, 66-33 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று மூன்றாமிடத்தைப் பெற்றது.
9 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026