Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஏப்ரல் 17 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சதீஸ்
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் மத்திய பிரிவில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் றெட்பக் ஈகிள்ஸ் சம்பியனானது.
ஆறு அணிகள் பங்குபற்றிய இத்தொடரின் நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் கிங்ஸ்கோபுராவை வென்றே றெட்பக் ஈகிள்ஸ் சம்பியனாகியிருந்தது.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய றெட்பக்
ஈகிள்ஸ், ஐந்து ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 95
ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 96 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கிங்ஸ்கோபுரா 5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 63 ஓட்டங்களையே பெற்று 32 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது.
இந்நிலையில், இத்தொடரில் கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும், வெற்றிக் கேடயங்களும், பதக்கங்களும் வழங்கி வைக்கபட்டமை
குறிப்பிடத்தக்கது.
21 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago