Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வந்த ஜயா பார்ம் வெற்றிக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் விம்பிள்டன் சம்பியனானது.
புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் நியூ ஸ்டார்ஸை வென்றே விம்பிள்டன் சம்பியனானது.

விம்பிள்டன் சார்பாக, எம்.எம். நதீம், எம்.ஜே.எம். சிசான், எம்.எச். ஹிமாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, நியூ ஸ்டார்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை அஹ்ஸாப் அஹமது பெற்றிருந்தார்.
சம்பியனான விம்பிள்டனுக்கு 50,000 ரூபாய் பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும், இரண்டாமிடத்தைப் பெற்ற நியூ ஸ்டார்ஸ் அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 30,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டன.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago