Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்லம் எஸ். மௌலானா

சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள பூப்பந்தாட்ட உள்ளக அரங்கம் நேற்று மாலை கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இவ்வைபவத்தில் கல்முனை மாநகர சபைத் தலைவர் ஏ.எம். றகீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனைத் திறந்து வைத்தார்.
அத்துடன் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஏ. றபீக், எம்.ஐ.ஏ. அஸீஸ், எம்.வை.எம். ஜௌபர், ஏ.ஆர்.எம். அஸீம், கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத் தலைவர் எம்.ஐ.எம். மன்சூர், செயலாளர் அலியார் பைசர், பூப்பந்தாட்ட அரங்கின் ஸ்தாபகரான ஏ.ஆர். ஆதில் அஹ்னாப், வர்த்தகப் பிரமுகர்களான எம்.எச்.எம். நௌபர், இக்ரா ஜலால் சத்தார் ஆகியோரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்ததுடன் மற்றும் பலரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
கிழக்கு மாகாணத்தில் தனி நபர் ஒருவரால் அனைத்து வசதிகளும் கொண்டதாக நவீன முறையில் முதன் முறையாக அமைக்கப்பட்ட பூப்பந்தாட்ட உள்ளக அரங்கம் இது எனவும் சாய்ந்தமருது பிரதேசத்தின் விளையாட்டுத்துறை வரலாற்றில் இது முக்கிய மைல்கல் எனவும் இதன்போது அதிதிகள் சுட்டிக்காட்டி, பாராட்டுத் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .