2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் கழக பொதுக் கூட்டம்

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 20 , பி.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டம், புதிய சீருடை அறிமுக நிகழ்வு ஆகியன சாய்ந்தமருது இளைஞர் சேவைகள் மன்ற பயிற்சி நிலையத்தில் விளையாட்டு பாட ஆசிரியரும், கழக அமைப்பாளருமான எம்.எச்.எம். முஸ்பீக், கழக முகாமையாளர் அப்ரத் அலி ஆகியோரின் நெறிப்படுத்தலில் கழக செயலாளர் லாபீர் முஹம்மட் ஷிப்னாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர பிரதி முதல்வரும், ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் கலந்து கொண்டு கழக சீருடையை அறிமுகம் செய்து வைத்ததுடன், கழகத்துக்கான விளையாட்டு உபகரணங்களையும், கழக மேம்பாட்டுக்கான உதவித் தொகையையும் வழங்கி வைத்தார்.

நிகழ்வில் இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவக சம்மாந்துறை நிலையத்தின் விரிவுரையாளர் எம்.பி.நௌஸாத், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் பணிப்பாளர் ஊடகவியலாளர் யூ.எல்.என். ஹுதா, சாய்ந்தமருது கிரிக்கெட் சம்மேளன செயலாளரும், விளையாட்டு உத்தியோகத்தருமான  ஏ.எம்.ரிஷாட் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தியதுடன் 19 வயதிற்குட்பட்ட அம்பாறை மாவட்ட அணிக்கு தேர்வான வீரர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக தெரிவும் இடம்பெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .