2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சிநேகபூர்வ போட்டியில் வென்ற லக்கி

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 09 , பி.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்துடனான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் லக்கி விளையாட்டுக் கழகம் வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்கி, 30 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து  154 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு, 155 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பிரண்ட்ஸ், 30 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்று 16 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

லக்கி விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், ஊடகவியலாளருமான எஸ்.எம். அறூஸின் அழைப்பை ஏற்று வருகை தந்த லங்கா பிறீமியர் லீக்கின் ஜஃப்னா கிங்ஸின் கிரிக்கெட் பணிப்பாளர் கணேசன் வாகீசன், இப்பிராந்திய கிரிக்கெட் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் குறித்து வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.  

மிகச்சிறந்த கிரிக்கெட் வீரா்களை தேசிய மட்டத்திலுள்ள கிரிக்கெட் அணிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பபை ஏற்படுத்தித் தருவதுடன் அதற்கான வசதிகளை செய்து தருவதாகவும் வாகீசன் இங்கு குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .