R.Tharaniya / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருட மாணவராக கல்வி கற்று வரும் கற்பிட்டியைச் சேர்ந்த ஸாஹிர் இஷ்ராத் ஹூசைன் 2024 ம் ஆண்டுக்கான தேசிய பல்கலைக்கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியில் பங்குபற்றிய துடன் அணியின் வெற்றிக்கு பாடுபட்டவர்கள் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை யின் பழைய மாணவரும், கற்பிட்டி பேர்ல்ஸ் உதைபந்தாட்ட அணியின் வீரருமான இவர் கற்பிட்டியில் வசித்து வரும் முன்னாள் ஆசிரியர் ஸாஹீர் மற்றும் றஸீதா உம்மா தம்பதிகளின் புதல்வர் ஆவார். மேலும் இஷ்ராத் ஹூசைன் 2023 ம் ஆண்டிலும் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் சிறந்த உதைபந்தாட்ட வீரர் என்ற பாராட்டை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எம்.யூ.எம்.சனூன்


1 hours ago
06 Feb 2026
06 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
06 Feb 2026
06 Feb 2026