Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 16 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வி. சுகிர்தகுமார்
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தேயில் சிறந்த வீரராக அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் தேசிய பாடசாலை மாணவனும் ராம் கராத்தே சங்கத்தின் வீரருமான எஸ்.நவக்சன் தெரிவு செய்யப்பட்டார்.
இவ்வாறு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வீரர் ஒருவர் தேசிய ரீதியில் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதற்தடவையாகும். கிளிநொச்சி உள்ளக விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை (11) முதல் திங்கட்கிழமை (14) வரை நடைபெற்ற போட்டிகளிலேயே நவக்சன் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டதுடன் திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட இராமகிருஷ்ண மிஷன் தேசிய பாடசாலை நான்கு மாணவர்களும் பதங்கங்களை பெற்றுக்கொண்டனர்.
இதில் குமித்தே போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட போட்டியில் நவக்சன் வெள்ளிப் பதக்கத்தையும், 16 வயதுப் பிரிவில் கே. சஜந்தன் வெண்கல பதக்கத்தையும் காத்தா போட்டிகளில் 20 வயது பிரிவில் நவக்சன் வெண்கலப் பதக்கத்தையும், 16 வயதுப் பிரிவில் எஸ். கிவோன்ஷ்டன் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்து பதங்கங்களை வென்ற ஒரே வலயம் திருக்கோவில் கல்வி வலயம் என்பதுடன் இராமகிருஷ்ண மிஷன் தேசிய பாடசாலை தேசிய ரீதியில் மூன்றாம் நிலையினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிகளுக்காக மாணவர்களை பயிற்றுவித்து தயார்படுத்திய ராம் கராத்தே சங்கத்தினருக்கும் ஸ்தாபகரும் சங்கத்தின் பிரதம போதானாசிரியருமான சிகான் கே. கேந்திரமுர்த்தி, பயிற்றுவிப்பாளர் கே. ராஜேந்திரபிரசாத் (ராமிலன்), கே.சாரங்கன் ஆகியோர்களுக்கும் பாடசாலை நிர்வாகம் மற்றும் கல்விச்சமூகம் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago