Shanmugan Murugavel / 2022 டிசெம்பர் 27 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்

அரச திணைக்களங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி சிறைச்சாலை திணைக்களத்துக்காக அதிக பதக்கங்களைப் பெற்ற வீரர்கள் யாழ்ப்பாணத்தில் கௌரவிக்கப்பட்டனர்.
வெற்றி பெற்றவர்களை வவேற்கும் நிகழ்வானது, யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் உத்தியோகத்தர்களால் அண்மையில் நடாத்தப்பட்டது.
யாழ். சிறைச்சாலையின் வீரர்களான யூட் பீரிஸ் உயரம் பாய்தல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், ரி.சி. அன்ரு குண்டு போடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் தட்டெறிதலில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
எஸ். சியானியஸ் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், எச்.ஜே. அபேயரத்தன 110 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும், ஜே. றொகான் 4 ×4 00 மீற்றர் அஞ்சலோட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் 4 ×100 அஞ்சலோட்டத்தில் வெண்கல பதக்கத்தையும் என மொத்தமாக 7 பதக்கங்களைப் பெற்றனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago