2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ட்ரிபிள் செவன் அணி சம்பியனாக தெரிவு

R.Tharaniya   / 2025 ஜூலை 06 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் ட்ரிபிள் செவன் அணி 43 வருட கால வரலாற்றில் முதன் முறையாக சம்பியனாக மகுடம் சூடி உள்ளது.

புத்தளம் காற்பந்தாட்ட லீக் புதிய நிர்வாகம்  அண்மையில் கற்பிட்டியில் நடாத்தும் அணிக்கு ஒன்பது பேர் கொண்ட முதலாவது காற்பந்தாட்ட தொடர் ஒன்றில் கலந்து கொண்ட போதே ட்ரிபிள் செவன் அணி இந்த வரலாற்று வெற்றியை பெற்றிருக்கின்றது.

புத்தளம் நகரில் நடைபெற்று வருகின்ற காற்பந்தாட்ட தொடர்களிலே கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பல சிரமங்களுக்கு மத்தியில் கற்பிட்டியில் இருந்து புத்தளம் வருகை தந்து போட்டிகளில் பங்கேற்ற கற்பிட்டி பேர்ள்ஸ்  அணியினரை கௌரவிக்கும் பொருட்டே இந்த போட்டி தொடரினை புத்தளம் லீக்கின் புதிய நிர்வாகம் கற்பிட்டியில் நடாத்துவதற்கு  தீர்மானித்திருந்தது.

புத்தளம் காற்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில், லீக்கில் அங்கம் வகிக்கும் 12 அணிகளுக்கான இந்த போட்டித் தொடர் கற்பிட்டி அல் அக்சா தேசிய பாடசாலை மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.  12 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவில் 3 அணிகள் இடம் பெறும் வண்ணம் இந்த தொடர் வடிவமைக்கப்பட்டது. 

இறுதியில் லிவர்பூல், த்ரீ ஸ்டார்ஸ், ட்ரிபிள் செவன் மற்றும் அல் அஷ்ரக் ஆகிய 04 கழகங்கள் அரை இறுதி போட்டிகளுக்கு தெரிவாகின.  நடைபெற்ற அரை இறுதி போட்டிகளின் பிரகாரம் த்ரீ ஸ்டார்ஸ் மற்றும் ட்ரிபிள் செவன் ஆகிய அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின. 

பரபரப்பான இறுதிப் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் எந்த அணிகளும் கோல்களை பெறாத நிலையில் நடைபெற்ற பெனால்டிஉதையில் ட்ரிபிள் செவன் அணி 03 : 01 கோல்களினால் வெற்றி பெற்று சாம்பியனாக மகுடம் சூடியது.  தொடரின் சிறந்த வீரராக த்ரீ ஸ்டார்ஸ் அணியின் நிசாத் (மலிங்க) தெரிவானார். 

தொடரின் சிறந்த கோல் காப்பாளராக ட்ரிபிள் செவன் அணியின் முஹம்மது அப்லல் தெரிவானார். லீக் தலைவர் முஹம்மது யமீன், புத்தளம் பர்வீன் ராஜா பவுண்டேசன் நிறுவன தலைவரும், புத்தளம் மாநகர சபை உறுப்பினருமான பர்வீன் ராஜா, புத்தளம் மாநகர சபை உறுப்பினரும்,புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் தலைவருமான ரனீஸ் பதூர்தீன் மற்றும் புத்தளம் காற்பந்தாட்ட நடுவர்கள் சங்கத் தலைவர் ஏ.எம்.பஸ்ரின் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்து கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

எம்.யூ.எம்.சனூன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .