Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஏப்ரல் 02 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
தலவாக்கலை பெருந்தோட்ட க் கம்பனிக்கு உட்பட்ட கிறேட்வெஸ்டன், லோகி ஆகிய தோட்டங்களில் பணிபுரியும் பெருந்தோட்ட உத்தியோகத்தர்க ளுக்கிடையிலான டீ 20 கிரிக்கெட் போட்டியில், கிறேட்வெஸ்டன் அணி, 113 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
கிறேட்வெஸ்டன் தோட்ட முகாமையாளர் கோசல விஜேசேகரவின் ஏற்பாட்டில், ரதெல்ல டீஏசிசி விளையாட்டு மைதானத்தில், ஞாயிற்றுக்கிழமை (24) இந்தப் போட்டி நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லோகி அணியினர், களத்தடுப்பை முதலில் தெரிவு செய்தனர்.
முதலாவதாக துடுப்பெடுத்தாடிய கிறேட்வெஸ்டன் அணி, 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 187 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
கிறேட்வெஸ்டன் அணியின் சார்பில் அருள்குமார் ஆட்டம் இலக்காமல், 65 ஓட்டங்களையும் அணியின் தலைவர் கமல், 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில், லோகி அணியின் சார்பில் சிவராஜ் 4 ஓவர் பந்து வீசி, 5 ஓட்டங்களுக்கு, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
188 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய லோகி அணியினர், 73 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.
இந்நிலையில், 113 ஓட்டங்களால் கிறேட்வெஸ்டன் அணி வெற்றிபெற்றது.
சிறந்த துடுப்பாட்டக்காரர்களாக கிறேட்வெஸ்டன் அணியின் அருள்குமார், கமல் ஆகியோரும், சிறந்த பந்து வீச்சாளராக லோகி அணியின் சிவராஜும் தெரிவுசெய்யப்பட்டனர்.
30 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago