Janu / 2025 மே 28 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய கயல் லியனகே, மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று புதன்கிழமை (28) காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தார்.
காயல் லியனகே (12 வயது) கொழும்பில் உள்ள ஒரு சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியாவார் .
இந்தப் போட்டி உலகின் 64 நாடுகளைச் சேர்ந்த 1,095 விளையாட்டு வீரர்களின் பங்கேற்பில் செக் குடியரசின் ஸ்னோய்மோவில் நகரில் மே 10ஆம் திகதி முதல் மே 25ஆம் திகதி வரை நடைபெற்றது.
இலங்கையின் துப்பாக்கி சுடுதல் போட்டி வரலாற்றில் ஒரு தனிநபர் வென்ற முதல் சர்வதேச பதக்கம் இது என்று இலங்கை தேசிய ரைபிள் சங்கத்தின் தலைவர் ரியர் அட்மிரல் மஞ்சுல திசாநாயக்க தெரிவித்தார்.
குறித்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் இலங்கை ரைபிள் சங்கத்தின் உயர் அதிகாரிகள் குழு அவரை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
டி.கே.ஜி.கபில


18 minute ago
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
26 minute ago
1 hours ago