Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 26 , பி.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

இலங்கை தேசிய கராத்தே போட்டியானது பண்டாரகம உள்ளக அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
21 வயதுக்கும் மேற்பட்ட சிரேஷ்ட, 21 வயதுக்கும் கீழ்ப்பட்ட பிரிவினர்களுக்கிடையில் கிலோ கிராம் அடிப்படையில் நடைபெற்ற போட்டியில் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் இருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில், கிழக்கு மாகாண கராத்தே சம்மேளன தலைவரும் ஐ.எம்.ஏ சங்கத் தலைவருமான முகம்மத் இக்பாலால் பயிற்சி வழங்கப்படுகின்ற தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களான ரீ.ஐ.எஸ். பீரீஸ், எச்.எம். ஸசீன் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும், டபிள்யு.ரீ.ஏ. சந்தரூவன், எம்.எச். முர்சிதீன், டி.எம்.கே.எஸ். திசநாயக ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .