2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தேசிய மட்ட ஜுடோ போட்டிக்கு மட்டுவிலிருந்து 12 வீர, வீராங்கனைகள்

Shanmugan Murugavel   / 2022 செப்டெம்பர் 21 , பி.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எஸ். எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவிற்கான ஜுடோ போட்டிகள், திருகோணமலை மக்கேசர் உள்ளக விளையாட்டு அரங்கில் அண்மையில் இடம்பெற்றது.

இதில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவானவர்களுக்கான  போட்டிகள் இடம்பெற்றன.

இப்போட்டிகளில் மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய வீர, வீராங்கனைகள் ஆறு தங்கப் பதக்கங்களையும், ஆறு வெள்ளிப் பதக்கங்களையும், ஆறு வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி. ஈஸ்பரன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவின் விளையாட்டு உத்தியோகத்தர் சிவகுமார் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ்  மட்டக்களப்பு மாவட்ட ஜுடோ பயிற்றுவிப்பாளர் சுப்ரமணியம் திவாகரனின் பயிற்றுவிப்பில் மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்குபற்றிய வீர, வீராங்கணைகள் வெற்றியை தமதாக்கிக் கொண்டுள்ளனர்.

மேலும் தேசிய மட்டத்தில் நடைபெறுவிருக்கும் ஜுடோ போட்டிகளில் மட்டக்களப்பைச் சேர்ந்த 12 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .