2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

தேசியத்தில் முதலிடம் பெற்ற அர்ஹாமுக்கு பாராட்டு

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 29 , மு.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கிடையிலான மல்யுத்தப் போட்டியானது கண்டியில் நடைபெற்றபோது நுரைச்சோலை தேசிய பாடசாலையை சேர்ந்த முகம்மது சியாம் முகம்மது அர்ஹம் 71 கிலோ கிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் நுரைச்சோலை பாடசாலை வரலாற்றில் விளையாட்டுத் துறையில் முதல் தங்கப்பதக்கம் வென்று “தங்க மகன்” என்ற பெருமையையும் இவர் ஈட்டியுள்ளார். 

இவரை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் அதன் அதிபர் எம்.ஐ.எம். இம்ரான்கான் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .