Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 21 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க. அகரன்

யாழ்ப்பாணம் கந்தர்மடம் சைவpபிரகாச பாடசாலையில் அண்மையில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட பளு தூக்கும் போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் பதக்கங்களை தமதாக்கிக் கொண்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கந்தர்மடம் சைவப்பிரகாச பாடசாலையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட பளுதூக்கும் போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய பயிற்றுவிப்பாளர் ச. ஜெனோஜனின் பயிற்றுவிப்பில், 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 49 கிலோ கிராம் பிரிவில் நா. நகிந்தன், 82 கிலோ கிராமைத் தூக்கி தங்கமும், ஜொ. ஜதுர்சன் 55 கிலோ கிராம் பிரிவில் 97 கிலோ கிராம் தூக்கி வெள்ளிப் பதக்கமும், கி. சுபிஸ்கரன் 59 கிலோ கிராம் பிரிவில் 100 கிலோ கிராம் தூக்கி வெள்ளிப் பதக்கமும், 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் அ. கோகுலன் 65 கிலோ கிராம் பிரிவில் 125 கிலோ கிராம் தூக்கி தங்கப் பதக்கம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்துள்ளனர்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026