Editorial / 2017 ஜூன் 17 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சந்துன் கொடிதுவக்கு

பண்டாரவளை கால்பந்தாட்ட லீக்குடன் இணைந்து, கிராமியப் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாமொன்றை, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம், பண்டாரவளையில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நேற்று ஒழுங்கு செய்திருந்தது.
இந்தப் பயிற்சி முகாமை, சென். தோமஸ் கல்லூரி மைதானத்திலும் பண்டாரவளை பொது மைதானத்திலும், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளத்தின் தொழில்நுட்பப் பணிப்பாளரும் கிராமியப் பகுதிகளுக்கான முகாமையாளரான சமிந்த ஸ்டெய்ன்வோல் நடாத்தியிருந்தார்.
குறித்த பயிற்சி முகாமில், பண்டாரவளை மாவட்டத்திலுள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், கழகங்களின் பயிற்றுநர்கள் உட்பட, மொத்தமாக 30 பேர் பங்கேற்றிருந்தனர். குறித்த பயிற்சி முகாமின் இறுதி நாளில், பண்டாரவளை சென். தோமஸ் கல்லூரி, விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம், ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரி, சேர் றஸிக் ஃபரீட் மகா வித்தியாலயம், தர்மபால மகா வித்தியாலயம், தியத்தலாவ மத்திய மகா வித்தியாலயம், கொஸ்லாந்த தேசிய கல்லூரி, பண்டாரவளை சென். ஜோசப் கல்லூரி, பண்டாரவளை தமிழ் மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய, ஏறத்தாழ 250 சிறுவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்தப் பயிற்சி முகாமை, பண்டாரவளை கால்பந்தாட்ட லீக்கின் அதிகாரிகளும் மத்தியஸ்தர் எல்.கே.ஐ உதயகாந்தவும் ஒருங்கிணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
18 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
5 hours ago