2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

பிரகாசித்த ஒலுவில் அல் – மதீனா

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 01 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- றியாஸ் ஆதம்

அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் ஒலுவில் அல் - மதீனா வித்தியாலய மாணவர் 12 பேர் முதலிடங்களைப் பெற்று தங்களது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான இவ்விவிளையாட்டுப் போட்டியானது அக்கரைப்பற்று அஸ் - ஸிறாஜ் மகா வித்தியாலய மைதானத்தில் சனிக்கிழமை (30) நடைபெற்ற நிலையில் மதீனா சார்பாக பங்குபற்றிய தரம் - 05 பெண்கள் பிரிவு மாணவர்கள் தங்கப் பதக்கத்தை பெற்று சம்பியனாகவும், தரம் - 05 ஆண்கள் பிரிவு மாணவர்கள் வெண்கலப் பதக்கங்களையும், தரம் - 04 பெண்கள் பிரிவு மாணவிகள் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இதில் 12 பேர் இரண்டாமிடத்தினையும், 12 பேர் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர். குறித்த மெய்வல்லுநர் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் மாகாண மட்ட போட்டியிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .