2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

புத்தளத்தில் கரப்பந்தாட்டத் துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கை

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 30 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளத்தில் அருகி வரும் கரப்பந்தாட்ட விளையாட்டுக் கலாசாரத்தை மீண்டும் புத்துயிரூட்ட சாஹிரா பழைய மாணவர் குழுக்கள் அணி சேர்ந்து வருகின்றனர்.

கல்லூரி மாணவர் கரப்பந்தாட்ட அணியை, பழைய மாணவரை உள்ளடக்கிய டாஸ் கேம் அணிகளை பயிற்றுவித்து பலப்படுத்தவும், புத்தளம் நகருக்கே உரித்தான பீல்ட் கேம் மற்றும் பல்வகைமை கொண்ட கரப்பந்தாட்ட அணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் விஷேட கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது.

சாஹிரா பழைய மாணவர் குழுக்கள் மத்தியில் தொடர்களை நடாத்தி எதிர்வரும் காலத்தில் சாஹிரா வாளாகத்தில் கரப்பாந்தாட்ட அரங்கை நிர்மாணிப்பதற்கான பணிகளை முன்னெடுக்கவும் தீர்மாணிக்கப்பட்டது.

சாஹிரா பழைய மாணவர் குழுக்களின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்த இந்த சந்திப்பின் அடுத்த நகர்வாக கல்லூரியின் அதிபர் தலைமையில், ஏனைய எல்லா பழைய மாணவர் குழுக்களையும் உள்ளடக்கிய சாஹிரா வொலிபோல் அமைப்பு உருவாக்கத்துக்கான முன்மொழிவும் செய்யப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .