2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘மடு மாந்தை கால்பந்தாட்ட லீக் தொடர்பாக பொய் பிரச்சாரங்கள்’

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 28 , மு.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். றொசேரியன் லெம்பேட்

மடு மாந்தை கால்பந்தாட்ட லீக் தொடர்பாக போலிப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மடு மாந்தை கால்பந்தாட்ட லீக்கின் தலைவர் மதுரநாயகம் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் அண்மையில் ஊடகங்களுக்கு மதுரநாயகம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “மடு மாந்தை கால்பந்தாட்ட லீக்கின் நிர்வாக தெரிவு தொடர்பாக அண்மையில் ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு உண்மைக்கு புறம்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதன.

அவர்கள் தெரிவித்த கருத்து தொடர்பாக உண்மையான கருத்துகளை முன்வைக்க வேண்டிய கடமை மடு மாந்தை கால்பந்தாட்ட லீக்கின் தலைவர் என்ற வகையில் எனக்குள்ளது.

கடந்த மாதம் 1 ஆம் திகதி, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் இருந்து கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றது. தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு முன்னர் 14 நாட்களுக்கு முன்னர் அறிவித்தல் வழங்குமாறு கோரப்பட்டிருந்தது. அதற்கமைவாக 3-03-2023 அன்று கத்தாளம்பிட்டியில் நடத்தவுள்ளதாக நாங்கள் அறிவித்தல் வழங்கினோம்.

மடு மாந்தை லீக் என்ற பெயரிலேயே தெரிவுக்கான கழகங்கள் உள்ளன. மாந்தை மற்றும் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கால்பந்தாட்ட கழகங்களுக்கு மாத்திரம் பிரதான முன்னுரிமை வழங்கப்படும். அக்கழகங்களுக்கு மாத்திரம் வாக்களிக்கும் உரிமையுள்ளது. அது யாப்பிலுமுள்ளது.

அதற்கமைவாக குறித்த இரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள கால்பந்தாட்டக் கழகங்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்பதன் அடிப்படையில் 13 கழகங்கள் இருந்தன. அதற்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.தேர்தல் எவ்வாறு இடம் பெறும் என்ற விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த 13 விளையாட்டு கழகங்களுக்கும் பதிவுத்தபாலில் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மூன்று கழகங்களுக்கு மாத்திரமே அறிவித்தல் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 13 கழகங்களுக்குகு பதிவுத்தபாலில் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இம்மாதம் மூன்றாம் திகதி தேர்தலை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இரண்டாம் திகதி தகவலொன்று கிடைத்தது. குறித்த தேர்தலை குழப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

உடனடியாக இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்திற்கு சென்று கோரிக்கை ஒன்றை முன் வைத்தோம். மூன்றாம் திகதி இடம் பெற உள்ள தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்த உள்ளனர். எனவே பாதுகாப்பு தேவை என தெரிவித்தோம். அதற்கமைவாக எமக்கு தேர்தலை நடத்த பாதுகாப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.

அதற்கமைவாக இம்மாதம் மூன்றாம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ள இடத்துக்கு வந்து பாதுகாப்பு வழங்கினார்கள். 3 மணிக்கு தேர்தல் ஆரம்பிக்க இருந்த போது சில கழங்கள் உள்ளே வந்தன.  எனினும் அன்றைய தினம் தேர்தல் இடம்பெற்ற பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் நடந்து கொண்டனர். 3.15 மணி அளவில் கூட்டம் ஆரம்பமானது.  அதன் பின்னர் வந்த கழகங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

அதன் பின்னர் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது. மறுநாள் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கு எமது அறிக்கையை அனுப்பினோம்.இது தான் நடந்த விடயம்” என்று கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .