2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 07 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க. விஜயரெத்தினம்

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழாவானது அடுத்த மாதம் 20, 21ஆம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கையில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மீண்டும் மாற்றுத்திறனாளிகளை பேசு பொருளாக்கும் நோக்கோடு இவ்விளையாட்டு விழா நடாத்தப்படவுள்ளது என தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா சார்பான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று  நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்...

“டேட்டா சரிட்டி, மட்டக்களப்பு மாற்றுத்திறனாளிகள் சம்மேளனம் ஆகியன இணைந்து நடாத்தும் இந்த விளையாட்டு விழாவில்  கிழக்கு மாகாணத்தில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலிருந்து 1000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ளும் இந்த விளையாட்டு விழாவுக்கு பிரதான அனுசரணையை அபி டயமன்ட், ராஜ் கிளஸ்டர் மற்றும் லிங்க்ஸ் லீகல் ஆகிய நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.

மட்டக்களப்பில் இருந்து 26 மாற்றுதிறனாளிகள் அமைப்புகளும், அம்பாறையில் இருந்து 8 மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களும், திருகோணமலையில் இருந்து 4 மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களும் இந்த விளையாட்டு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டு போட்டியின் முதல் அங்கமாக பார்வை இழந்தவர்களுக்கான சத்த பந்து கிரிக்கட் போட்டி இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் மட்டக்களப்பை தளமாக கொண்டியங்கும் உதயம் விழிப்புலனிழந்தோர் சங்கத்தினரும்,யாழ் விழிப்புலனிழந்தோர் சங்கத்தினரும் பங்குபற்றுகின்றனர் .

இந்த விளையாட்டு விழாவிற்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம், விளையாட்டுத் திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் உதவி புரிகின்றன. அவர்களுக்கும் எமது DATA charity நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்” எனக் கூறியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .