Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் சபையும், இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கமும் இணைந்து நாடு முழுவதும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளின், பாடசாலை மாவட்ட அணிகள், மாவட்ட பயிற்சியாளர்கள்,மாவட்ட கிரிக்கட் சங்கங்களுக்கு புதன்கிழமை (20) அன்று உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தலைமையில் கொழும்பில் உள்ள டன்சன் வெள்ளை அரங்கில் நாடளாவிய ரீதியில் 24 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் உபகரணங்கள் வழங்கும் விழாவை அடுத்த மட்டக்களப்பு கிரிக்கெட் சங்கம் கிழக்கு மாகாண கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் எம்.பி. ரஞ்சன், செயலாளர் விவேகானந்தராஜா பிரதீபன் தலைமையில் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு புதன்கிழமை (20) அன்று மண்முனை பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளிதரன், அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சத்தியபிரியா வில்வரெட்ணம், உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சுதாகர், பிரதான கணக்காய்வாளர் ஜ.எம்.நியாஸ், மற்றும் மட்டு மத்தி வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எம்.ஜாவிட், மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் ரி.ரவி, மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.தங்கேஸ்வரன்,
பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் எஸ். சிறிதரன், கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் ரி. ஆனந்த ரூபன் மற்றும் பாடசாலை அதிபர்கள், மட்டக்களப்பு கிரிக்கட் சங்க தலைவர் உறுப்பினர்கள் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.
கனகராசா சரவணன்
11 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago