R.Tharaniya / 2025 செப்டெம்பர் 29 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் பனங்கட்டுகொட்டு புனித சூசையப்பர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் அமரர் தர்மலிங்கம் மனோன் மணி தம்பதிகளின் நினைவாக இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டியின் இறுதி நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (28) அன்று மாலை புனித சூசையப்பர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கனடா புரோடல் டிரான்சிட் லைன் அண்ட் நியூ கொமர்ஸ் பினான்சியல் குறுப் இயக்குனர் அகஸ்ரின் சவேரியான் மற்றும் கௌரவ விருந்தினர்களாக புனித செபஸ்தியார் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை பி.கிறிஸ்து நாயகம் அடிகளார், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,காதர் மஸ்தான், சிறப்பு விருந்தினர்களாக மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்,பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது இறுதி போட்டி இடம் பெற்றது.
பனங்கட்டுக்கொட்டு சென் ஜோசப் அணிக்கும்,நானாட்டான் டைமன் ஸ்டார் அணிக்கும் இடையில் இறுதி போட்டி இடம் பெற்றது.
இதன் போது நானாட்டான் டைமன் ஸ்டார் அணி முதலிடத்தையும்,பனங்கட்டு கொட்டு சென் ஜோசப் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
இதன் போது வெற்றி பெற்ற அணிகளுக்கு பண பரிசில்கள் மற்றும் வெற்றிக் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




எஸ்.ஆர்.லெம்பேட்
55 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
2 hours ago