Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூலை 27 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அறுகம்பே பிரதேசத்துக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அறுகம்பே அபிவிருத்தி போரம் ஏற்பாடு செய்துள்ள அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி இடம் பெறவுள்ளதாக போரத்தின் தலைவரும், இயன் மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தெரிவித்தார்.
குறித்த போட்டி தொடர்பான அறிமுக நிகழ்வும் ஊடகவியலாளர் சந்திப்பும் அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் தலைவரும், இயல் மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தலைமையில் சனிக்கிழமை (26) அறுகம்பே றாம்ஸ் கபே உல்லாச விடுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அறுகம்பே பிரதேசம் சுற்றுலாத் துறைக்கு பெயர் போன ஒரு சிறந்த இடமாகும்.
தற்போது இங்கு உள்நாட்டு மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுகின்றது.
குறிப்பாக நீர்ச்சறுக்கல் விளையாட்டிலும், அறுகம்பே பிரதேசத்தின் இயற்கை வளங்களைக் கண்டுகளிக்கவும் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி இம்முறையும் அறுகம்பே அரை மரதன்ஓட்டப்போட்டியின் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
”ஒன்றாக ஓடிஒன்றாய்எழுவோம்” எனும்தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள சர்வதேச தரத்திலான இந்த மரதன் ஓட்டப்போட்டியில் உள்நாட்டு வெளிநாட்டு மரதன் ஓட்டவீரர்கள் என சுமார் 300 பேர் பங்குபற்றியுள்ளனர்.
விசேடமாக மரதன்மற்றும் நெடுந்தூர ஓட்டங்களில் பிரசித்தி பெற்ற தென்ஆபிரிக்கா, கென்யா போன்ற நாடுகளில் இருந்தும் பல வீரர்கள் முன்கூட்டியே பதிவுகளை செய்துள்ளனர்.
அந்த வகையில் இதுவரை14 நாடுகளிலிருந்து 60 வெளிநாட்டு வீரர்களும், உள்நாட்டினைச் சேர்ந்த 120 வீரர்களும் ஒன்லைன் ஊடாகபதிவுகளை செய்துள்ளனர்.
மேலும் இம் மரதன் போட்டியில் பங்கேற்குமாறு உள்நாட்டு வெளிநாட்டு வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
இந்தப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறும் வீரர்களுக்கு பெறுமதியான பண பரிசில்களும், பதக்கம் மற்றும் சான்றுதழ்களும் வழங்கப்படவுள்ளது. உலகில் இடம் பெற்று வரும் பிரசித்தி பெற்ற மரதன்போட்டிகளில் அறுகம்பே அரை மரதனும் இடம்பிடிக்க வேண்டும் எனும் நோக்கில் அறுகம்பே அபிவிருத்தி போரம் 7 வது தடவையாக இப்போட்டியினை நடாத்துகின்றது என்றார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாஸித்,பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஅஹமட்நசீல்,பொத்துவில் பிரதேசசபையின் உபதவிசாளர் ஏ.மாபிர், அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதேச சபைஉறுப்பினருமான எம்.எச்.எம்.ஜமாஹிம், மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.அப்துல் மலிக் உட்பட பாதுகாப்புத்துறையினர், அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் உயர்பீட உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
றியாஸ் ஆதம்
18 minute ago
20 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago
2 hours ago
2 hours ago